ட்ரெண்டிங்

இளம் தொழில்முனைவோர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டம், அழகாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்டார்ட் நெட்வொர்க் இண்டர்நேஷனல். இந்நிறுவனத்தின் தலைவராகவும், நிறுவனருமாக இளங்கோ மற்றும்  இணை நிறுவனராக நாகராஜ் ஆகியோர் உள்ளனர். ஸ்டார்ட்நெட் ஆனது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த ஐடியாக்களுடன் இருக்கும் தொழில்முனைவோருக்கு ஸ்டார்ட்நெட் மூலம் முதலீட்டார்களிடமிருந்து முதலீடுகளை பெற்று தரும் நிறுவனம். ஸ்டார்ட்நெட்-ன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நெட்வொர்க் கூட்டத்தில் தி சோசியல் கம்பெனி நிறுவனர், பர்சனல் பிராண்டிங் பற்றிய சிறப்புரையாற்ற வருகை தரவுள்ளார். 

இதுகுறித்து ஸ்டார்ட்நெட் நிறுவனத்தின் தலைவர் இளங்கோ கூறுகையில், ஸ்டார்ட்நெட் சார்பாக, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள வின்சர் கேஷில் ஹோட்டலில், ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை ஸ்டார்நெட்டின் ஆகஸ்ட் மாத நெட்வொர்க் கூட்டம் நடைபெறுகிறது. சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் பங்கு பெறும், இந்நிகழ்ச்சியில் ஸ்டார் அப்களில் புதியவர்கள், எம்எஸ்எம்இ, மாணவ, மாணவிகள், மகளிர்கள் என 150- க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். 


ஸ்டார்நெட் சார்பாக பல்வேறு துறையை சார்ந்த 10 ஸ்டார் அப்கள் தங்களது தொழில் குறித்த உரையை முதலீட்டாளர்கள் முன் எடுத்துரைக்கின்றனர். மேலும் தி சோசியல் கம்பெனி நிறுவனர் சுதர்சனன் கணபதி பர்சனல் பிராண்டிங்  குறித்தும், தினேஷ் சுந்தரவேலு ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டங்கள் குறித்தும், ஸ்டார்நெட் தலைவராகிய நான் பொலிடிகல் டெக்ல் மார்க்கெட்டிங் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்தும் உரையாற்ற உள்ளோம். 

மேலும், ஸ்டார்நெட்- ன் இம்மாதத்தின் ஹைலைட் உறுப்பினராக எல்லோ ஜுவல்லர்ஸின் உரிமையாளர் அபிராமி சந்தோஷ் தனது தொழில் குறித்த உரையை முதலீட்டாளர்கள் முன் எடுத்துரைக்கிறார். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இளம் தொழில்முனைவோர்களும், புதிய தொழில் முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்" என்றுகேட்டுக் கொண்டுள்ளார்.