ட்ரெண்டிங்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை !!!

 

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சேலம் மாநகரில் மூணாவது நாளாக போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை செய்தனர். 

டெல்லி செங்கோட்டை அருகே கடந்து 10-ம் தேதி சென்ற காரில் இருந்து குண்டு வெடித்து சிதறியது இந்த சம்பவத்தில் 13 நபர்கள் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சலையை ஏற்படுத்தியுள்ளது இந்த இடத்து நாடு முழுவதும் முக்கிய கோயில்கள் சுற்றுலா மையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தொடர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் புதிய பழைய பேருந்து நிலையம் பிரதான கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் ரூபி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு, தொடர் சோதனையில் மூன்றாம் நாளாக ஈடுபட்டனர் .மேலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் உள்ள கார், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் அரசு வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.அதேபோல் மக்கள் அதிகம் கூடும் பிரதான பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் லாட்ஜ்களில் தங்கியுள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.