பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அருள் இன்று (ஜன.25) காலை செட்டிச்சவாடியில் இருந்து வெள்ளக்கல்பட்டி செல்லும் வழியில் செட்டிசாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் பெண்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பெண்கள் செட்டிசாவடி குப்பைமேட்டை அகற்றும் வேண்டுமென கேட்டனர். நானும் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசி வருகிறேன். போராட்டம் செய்வதற்கு முதற்கட்டமாக கையெழுத்து இயக்கத்தையும் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. போராட்டத் தேதி அறிவித்த உடன் வாருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தலாம் என கூறினார். அதேபோல் மாநகராட்சியுடன் செட்டிச்சாவடி இணைக்கப்பட்டதாக செய்தி அறிந்து கேட்டனர்.
அதற்கு செட்டிசாவடி மற்றும் கொண்டநாயக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க விட மாட்டேன்; இதற்கும் சேர்ந்து ஒரு போராட்டத்தை உங்களுடன் இணைந்து செய்ய தயாராக உள்ளேன் என்று எம்.எல்.ஏ. கூறினார்.


