ட்ரெண்டிங்

சேலம்-சாயப்பட்டறைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு !!!

 

சேலம் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைப்புக்கு எதிர்ப்பு – சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கிராம மக்கள் ஆவேசம்

சேலம், நவம்பர் 7:

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் (Integrated Textile Park) அமைக்கப்பட உள்ள சாயப்பட்டறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் கிராம மக்கள் இன்று திரண்டனர்.

அப்பகுதியில் அரசு அனுமதியுடன் நவீன தொழில்நுட்பம் கொண்ட,சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கிராம மக்கள் தெரிவித்ததாவது:

“சாயப்பட்டறைகள் தொடங்கப்பட்டால், வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், காற்று மற்றும் மண் மாசடைந்து சுற்றுச்சூழல் பெரும் சேதம் அடையும்,இதனால் விவசாயம்,பாதிக்கப்படும்,”என்றனர்

இந்நிலையில், பொதுமக்கள் சார்பாக ஒரு குழு அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க தீர்மானித்து, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தினர்.

அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் அமைதியான முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.