ட்ரெண்டிங்

சேலம் அரசினர் ஐ.டி.ஐ.யில் காலியிடங்களுக்கான சேர்க்கை தொடக்கம் !!!

 

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான SCVT (Spot Admission) 14.11.2025 வரை நடைபெறவுள்ளது. டிஜிட்டல் போட்டோகிராபர் (மாற்றுத்திறனாளி) SCVT (Eligiblity Locomotor Disability, Cerebral Palsy, Leprosy Cured, Dwarfism, Acid Attack, Deaf, Hard Of Hearing, Autism) போன்ற பிரிவுகளில் (ஓராண்டு) உள்ள காலி இடங்களுக்கு 10 -ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேரடிச் சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி, e-mail id, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்) வங்கிக் கணக்கு விபரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ.235/-

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி போன்ற விலையில்லா பொருட்களும் பஸ் பாஸ் மற்றும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கும் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோறும் 1000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை சேரலாம்.நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, 94427-94071, 79043-15060, 99769-54196, 91500-62324 0 87782-73417 எண்களை தொடர்பு கொள்ளலாம்,என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்.