ட்ரெண்டிங்

சேலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆட்சியர் - ஆய்வு !!!

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,இன்று (04.11.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். 

ஆய்விற்கு பின் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் 2026 அக்டோபர் மாதம் 28 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கணக்கெடுப்பு பணிகள் சேலம் மாவட்டத்தில் இன்று 04.11.2025 முதல் டிசம்பர் 4 -ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சேலம் வடக்கு. சேலம் மேற்கு, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,264 வாக்குச்சாவடிகளில் 15.01.096 ஆண் வாக்காளர்களும், 15,29,075 பெண் வாக்காளர்களும், 366 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 30,30,537 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 3,264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் இன்றைய தினம் முதல் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.

மேலும், தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள். இறந்து போன வாக்காளர்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியியல் கட்சியின் முகவர்கள் மூலம் அறிந்து கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை பெற வரும் தேதியினை முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தி அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெருவதை உறுதி செய்திடவும் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.