தீபாவளி பண்டிகையொட்டி ஆத்தூரில் தீ விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில்,பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியாக சென்ற தீயணைப்பு துறையினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மிட் டவுன் சங்கத்தினர் ஆத்தூர் தீயணைப்புத்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்கும் போதும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் பாதுகாப்பாக இருப்பது,தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது எப்படி எனவும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தான விதிமுறைகள் அடங்கிய நோட்டீஸ் ஊர்வலம் ஆக வந்து பாடசாலைகள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தீயணைப்பு காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் நரசிம்மகுமார் செயலர் மதன்லால் பொருளாளர் பிரபு துணை ஆளுநர் சீனிவாசன் விழா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்முன்னாள் தலைவர்கள் ஹரி சந்திரசேகரன்,இளவரசு அபிஷேக்கிரிதாரி,ஜோ,மற்றும் சதீஷ், சூர்யா, இளங்கோ,ரமேஷ் ,ஜெயம் பாஸ்கர், மூர்த்தி சரவணன் செல்வகுமார்நவீன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

-lLyEX5kX7J.jpg )

-hcTFAGMRGb.jpg)