ட்ரெண்டிங்

சேலத்தில் லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் !!!

 

சேலம் மாவட்டத்தில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த நான்கு காவல்துறை அதிகாரிகள், லஞ்சம் பெற்ற வழக்கில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அன்று, ரேஷன் அரிசி கடத்தும் நபரிடம், ரூ.15,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து,ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (DVAC) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி,இன்ஸ்பெக்டர் ராமராஜன்,உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும்,சரவணன்,மற்றும் தலைமை பெண் காவலர் ராஜலட்சுமி ஆகிய நால்வரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்தனர். 

மேலும், சம்பவம் குறித்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், நால்வரையும் இன்று பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய காவல் துறை மேலதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சேலம் காவல் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.