ட்ரெண்டிங்

சேலத்தில் 5 புதிய BS VI மலைவழி பேருந்துகள் இயக்கம்-அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் !!!

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் ,சேலம் கோட்டம் சார்பில் மலைவழித்தடங்களில் புதிய BS VI குறுஞ்சட்ட புறநகர் பேருந்துகள் மற்றும் வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு,பேருந்து சேவைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று (10.10.2025) தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயனடையும் வகையில் பழைய பேருந்துகளை மாற்றம் செய்து, அதற்கு பதிலாக புதிய வகை பேருந்துகளாக இயக்கிடவும்,கிராமப்புறத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள். மகளிர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்கள் மற்றும் ஏற்கனவே இயங்கி வந்த வழித்தடங்களை நீட்டிப்பு செய்து பேருந்து சேவை கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அந்தவகையில், இன்றையதினம் மலைவழித்தடங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் குறுஞ்சட்ட BS III புறநகர் பேருந்துகளுக்கு பதிலாக புதிய BS VI குறுஞ்சட்ட புறநகர் பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு, பெலாத்தூர் வழியாக செம்மநத்தம் வரையிலும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு வழியாக பட்டிப்பாடி வேலூர் வரையிலும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு வழியாக கொட்டச்சேடு வரையில் 2 பேருந்துகளும், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொல்லிமலை வரை ஒரு பேருந்தும் என மலைவழித்தடங்களில் 5 புதிய BS VI குறுஞ்சட்ட புறநகர் பேருந்து சேவைகள் தொடங்கி வைத்தனர்.

மேலும்,பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் அடிப்படையில்,ஏற்காட்டிலிருந்து பட்டிபாடி வேலூர் வரை இயக்கப்பட்ட பேருந்து தற்பொழுது பட்டிபாடி வேலூரிலிருந்து மலை வழித்தடம் வழியாக சொனப்பாடி வரையிலும், இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,மாநிலங்களவை உறுப்பினர்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்,சேலம் மாநகராட்சி மேயர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர்,பொதுமேலாளர்,முதுநிலை துணை மேலாளர் (மனித வள மேம்பாடு) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.