சேலம் மாவட்டம் ஆத்தூரில்,தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பாதிப்பு,
தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்,
தமிழகத்தில் சுமார் 4500க்கும் மேற்பட்ட மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்,இன்னிலையில் பணியாளர்களின் நலன் கருதி பாரபட்சமின்றி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 20% ஊதிய உயர்வுடன்,ஏற்கனவே வழங்கிய 10% HRA - யை வழங்குதல்,2021க்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் கருணை ஓய்வூதியத்தினை ரூ.5000/- மாக உயர்த்தி வழங்கக் கோருதல்,ப்ளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைப்பு மற்றும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்யக் கோருதல். புதிதாக பணியில் சேரும் விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோருதல்.நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்களுக்கு பணி சுமையை போக்கும் வகையில் வெளிப்பணி முறையில் எடையாளரை நியமித்துக் கொள்ள அனுமதி கோருதல்,அதேபோல் சங்கத்திற்கு பயன்படாத கூட்டுறவு தணிக்கையினை விடுவிக்க கோருதல்.கணினி பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோருதல். உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை,நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கி நான்கு நாட்களாகியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் கெங்கவல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விவசாயிகள் வங்கிகளில் நகை கடன், உள்ளிட்ட பண பரிமாற்றம், நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி,பருப்பு,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர், எனவே தமிழக முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


