சேலம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் கதர் கிராமத் தொழில்கள் (காதி கிராப்ட்) சார்பில் மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி, தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கதர் பொருட்களைப் பார்வையிட்டு, தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர்,மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 2-ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சேலம் மாவட்டத்திற்கு 2025-26-ஆம் ஆண்டிற்கு ரூ.2.93 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.1.03 கோடி மதிப்பிற்கு கதர் மற்றும் கிராமப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளைப்போலவே நடப்பாண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு மற்றும் பாலியஸ்டர்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சேலம் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற மகளிரின் மேம்பாட்டு நலனைக் கருதியும். சிறு தொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையில் மாநில அரசும், கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திட கதர் துணிகளை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி கேட்டுக்கொண்டார்.
அதேபோல் இந்த ஆண்டு சேலம் உதவி இயக்குநர். கதர் கிராமத்தொழில்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் விருதாசம்பட்டி கிராமிய நூற்பு நிலையத்தில் பணிபுரியும் நூற்பாளர் திருமதி.எஸ்.பார்வதி என்பவர் 2024-2025ம் ஆண்டு மாநில அளவில் சிறந்த நூற்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் கதர் துறை திரு. கிரி ஐயப்பன். உதவி கதர் அலுவலர் திருமதி வசந்தா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

-HZipzbE1ox.jpeg )
