ட்ரெண்டிங்

தகாத உறவு....பெண் கொடூர கொலை- காவல்துறையினர் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம், சிவதாபுரத்தை அடுத்த பனங்காட்டில் உள்ள கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமுதா கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

அதே பகுதியில் உள்ள வெள்ளிப் பட்டறை ஒன்றில், அமுதா பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், அமுதா குடும்ப வறுமைக் காரணமாக, பலரிடம் ரூபாய் 6 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாகவும், அவர்கள் அமுதாவிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இச்சூழலில், தங்கராஜுவிடம் தனது கடனை அடைக்க அமுதா பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தங்கராஜ், கத்தியை எடுத்து அமுதாவை வயிற்று பகுதியில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

அதேபோல், தங்கராஜ் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைச் செய்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.