சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் நகர் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் மற்றும் திருத்தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று (மார்ச் 22) திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய்த்துறை, நில அளவைத் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அத்துடன், தேரோட்டம் தொடங்கும் இடத்தில் இருந்து வலம் வரும் சாலைகளான பழைய பேருந்து நிலையத்திற்கு வடக்கு புறம், திருக்கோயிலின் தெற்கு புறம் நுழைவு வாயில், முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், கடைவீதி, சின்ன கடைவீதி ஆகிய பகுதிகளிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் அகலம் குறித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தேரோட்டம் நடைபெறும் வகையிலும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
சேலத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் முதன்முதலாக திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-VfVR5VuP2m.jpg )
-SXgDfGgJfO.jpg)