ட்ரெண்டிங்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ரூ.130.13 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் 15- வது மத்திய நிதிக்குழு (2024- 2025) மானியத்தின் கீழ் துவங்கப்பட உள்ள கீழ்வரும் திட்டங்களுக்கு தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். 

தொளசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024- 2025) கீழ் தொளசம்பட்டியில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல்,தொளசம்பட்டியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், தொளசம்பட்டி பெருமாள் கோவிலில் கான்கிரீட் சாலை அமைத்தல், பூம்பட்டி பனங்காடு பகுதி வீதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பூம்பட்டி-ஒலைப்பட்டியில் பிளாக் சாலை அமைத்தல், பூம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சின்னகண்ணு காட்டு வளவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் போன்ற பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.