சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யயும் கடைக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் பணியையும் காவல்துறையினருடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டில் ரூபாய் 1.37 கோடி மதிப்பிலான 126 டன் தடைச் செய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது, வெளிமாநிலத்தில் இருந்து தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வங்கியில் காவல்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,306 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-CXs3La7MyU.jpg )
-SXgDfGgJfO.jpg)