நாட்டின் 76- வது குடியரசுத் தின விழாவையொட்டி, சேலம் ஜங்ஷனில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அதன் மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் பேசிய ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா கூறுகையில், ரயில்களில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 9 மாதங்களாக 2.085 மில்லியன் டன் சரக்குகள் ஏற் றப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவு செய்த டிக் கெட்டுகளில், 40 சதவீத வருவாய், கவுன்டர்கள் மூலம் வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் 10 சதவீத வருவாய், டிஜிட்டல் முறைகள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
நீலகிரி மலை ரயிலில் 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 489 சிறப்புப் பயணங்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 17.88 கோடி ரூபாய் கிடைத்தது. இது இந்த ரயில் வரலாற்றில், ஓராண்டில் இல்லாத அதிகபட்சம்.
பல்வேறு விதிகளில் தவறு செய்தவர்கள் மீது 5,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37.43 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. போலி ஐ.டி. பயன்படுத்தி மோசடியாக ரயில்வே இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 76 பேர் கைது செய்யப்பட்டனர். 19.42 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,386 ரயில்வே இ-டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.


