திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜன.15, ஜன.26 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜன.15- ஆம் தேதி புதன்கிழமை அன்றும், குடியரசுத்தினத்தை முன்னிட்டு ஜன.26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள். டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்காணும் நாள்களில் இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)