பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜன.13- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர்- மங்களூருவுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 06037) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13- ம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.50 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும்.
பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சோரனூர், பையனூர், காசர்கோடு, கண்ணூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். சிறப்பு ரயிலுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



