ட்ரெண்டிங்

ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிற்றுந்து சேவை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் சிற்றுந்து சேவையைத் தொடங்கியுள்ளனர். 

கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

முட்டல் கிராமத்தில் இருந்து ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத்துறை சார்பில் சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.