மேட்டூர் அருகே பா.ம.க. பேனரைக் கிழித்ததாகக் கூறி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி பகுதியில் பா.ம.க. சார்பில் நாளை (டிச.21) திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டிற்கான விளம்பர பேனரை பொட்டனேரி பேருந்து நிறுத்தம் அருகே வைத்திருந்தனர்.
சுமார் 50 அடி நீளம் 20 அடி உயரம் கொண்ட கட்சி பேனரை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த மேட்டூர் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்டோர் சேலம் மேட்டூர்- சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்- மேட்டூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸிற்கு மட்டும் வழிவிட்டு பின்னர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மேட்டூரில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் மற்றும் சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

-fronx-cng-gf4cVlCXJn.jpg )
-SXgDfGgJfO.jpg)