தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூபாய் 177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாலங்களின் கட்டுமானப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலத்தில் எங்கெங்கு புதிய பாலங்கள் கட்டப்படுகிறது என்பது விரிவாகப் பார்ப்போம். சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிலும், கெங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், அயோத்தியாப்பட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும், பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலும் புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளது.


