ட்ரெண்டிங்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்! 

சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் சேலம் வழியாக கர்நாடகாவின் ஹுப்ளி- கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் நவ.19-ம் தேதி முதல் ஜன.15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ஹூப்ளியில் இருந்து, மறுமார்க்கத்தில், புதன்கிழமை கோட்டயத்தில் இருந்தும் சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.