சேலம் மாநகரில் இன்று (அக்.22) மதியம் 02.00 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், 5 ரோடு, 4 ரோடு, மத்திய பேருந்து நிலையம், ஈரடுக்கு பேருந்து நிலையம், குகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையோர வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி விற்பனை தற்போது தான் தொடங்கியுள்ளது; மழை பெய்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம்; தொடர்ந்து மழை பெய்தால் அடியோடு தீபாவளி வியாபாரம் முடங்கிடும் எனக் கூறுகின்றனர்.


