ட்ரெண்டிங்

த.வெ.க.வினருக்கு வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாராட்டு! 


சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து பவானி செல்லும் கிழக்கு சாலையில் பாதாள சாக்கடைக் குழி சரிவர மூடப்படாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அத்துடன், சிறிய விபத்துகளும் ஏற்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மேட்டூர் நகர தலைமை பொறுப்பாளர் ரங்கசாமி என்கிற நியாயாதிபதி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து பாதாள சாக்கடைக் குழியை மூடினர். 

த.வெ.க.வினரின் இந்த சமூக சேவைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினார்.