ட்ரெண்டிங்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள்- அரசியல் கட்சிகள் மரியாதை! 

சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (அக்.30) சேலம் மாநகரம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். 

அந்த வகையில், முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதேபோல், பா.ஜ.க. சார்பில் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையிலான பா.ஜ.க.வினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். 

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.