ட்ரெண்டிங்

விநாயகர் சதுர்த்தி- பூக்கள் விலை உயர்வு! 

ஆவணி மாத தொடர் முகூர்த்தங்கள் மற்றும் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை 2- வது நாளாக இன்றும் (செப்.06) உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி, முல்லை ரூபாய் 800- க்கும், கனகாம்பரம் கிலோ ரூபாய் 1,000- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

பூஜைப் பொருட்களான வாழை இலை ஒன்று ரூபாய் 5- க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 7- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், வாழைப் பழங்கள், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.