மனைவி தற்கொலை செய்துக் கொண்டதால் மனமுடைந்து அரசு மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இனியன் (வயது 32) என்பவர் தென்காசியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சௌமியா என்ற பெண்ணை கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மனைவி 2 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்து, மனைவி இறந்த சோகத்தில் மருத்துவர் இனியன் வேதனையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



-hcTFAGMRGb.jpg)