ட்ரெண்டிங்

டெங்கு பாதிப்பு- மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்! 

டெங்கு பாதிப்புகள் தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறைக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவமனைகளில் தனி வார்டு, போதிய மருந்துகள் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். தொற்றுநோய்கள் அதிகமாகப் பதிவாகும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். 

டெங்கு பாதிப்பு சிகிச்சைகளுக்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்ணை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.