ட்ரெண்டிங்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி!

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஆகஸ்ட் 11) காலை 10.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறைச் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (கலால்) மாறன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகன்நாதன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.