ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு! 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜூன் 28- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. 

சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட ஜூன் 2024 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூன் 28- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215- ல் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.