ட்ரெண்டிங்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடந்த வாராந்திர ஆட்டுச்சந்தையில் 2 மணி நேரத்தில் ரூபாய் 2 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வரும் ஜூன் 17- ஆம் தேதி தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஆடுகளை வாங்கிச் சென்றனர். 10 கிலோ எடைக் கொண்ட ஆடு ரூபாய் 8,500 முதல் ரூபாய் 40,000 வரை விற்பனை செய்யப்பட்டது. 

சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து ஆடுகளுமே விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.