ட்ரெண்டிங்

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை! 

சேலம் மாநகரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

இன்று (ஜூன் 01) மாலை 04.30 மணியளவில் சேலம் மாநகரில் கனமழை இரண்டாவது நாளாக தொடங்கியது. குறிப்பாக, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, அழகாபுரம், 5 ரோடு, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. 

கனமழை காரணமாக, குகை மற்றும் திருச்சி பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளிச் சென்ற காட்சியைக் காண முடிந்தது

அதேபோல், கொண்டலாம்பட்டி பா.நாட்டாமங்கலம் பகுதியில் தகரங்கள் பறந்து மின்கம்பி மீது  விழுந்ததால் மின் கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விரைந்து மின்கம்பத்தைச் சரிசெய்ய மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.