ஆன்மிகம்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 22) காலை 09.00 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தேரில் அமர்ந்தபடி வலம் வந்த சுகவனேஸ்வரர் சாலையில் குவிந்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைவீதி, முதல் அக்ரஹாரம், பட்டைக்கோவில் வழியாகச் சென்று மீண்டும் ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் தேரோட்டம் நிறைவடைந்தது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷங்கள் ஒலித்தன. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு,அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.