ட்ரெண்டிங்

முட்டை உற்பத்திக் குறைந்துள்ளதால் விலை அதிகரிப்பு! 

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூபாய் 5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூபாய் 5.55- லிருந்து ரூபாய் 5.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ரூபாய் 1.50 உயர்ந்துள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில், முட்டையின் உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

அதேபோல், நாமக்கல் கோழி முட்டைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் முட்டையின் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.