ட்ரெண்டிங்

ஆட்டுச் சந்தையில் களைகட்டிய விற்பனை! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூபாய் 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளன. 

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகாலை முதலே ஆடுகளை வாங்க சந்தையில் குவிந்தனர். மேலும், அம்மன் கோயில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமானோர் ஆடுகளை வாங்கிச் சென்றனர். 

 குறிப்பாக, கருப்பு மற்றும் வெள்ளாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். கடந்த வாரங்களைக் காட்டிலும், இந்த வாரம் ஆடுகளின் விலை 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சித்திரை திருவிழா தொடங்கியுள்ள நிலையில், ஆடுகள் அதிகளவில் விற்பனையாக காரணமாகக் கூறப்படுகிறது.