ட்ரெண்டிங்

மாம்பழ வரத்துக் குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள்! 

சேலத்தில் மாம்பழம் வரத்துக் குறைந்துள்ளதால், அங்குள்ள குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மாம்பழம் சாகுபடி நடைபெற்று வருகிறது. சேலத்தில் விளையும் மல்கோ மாம்பழம் மிகுந்த சுவை மிகுந்தது. அதுமட்டுமின்றி சேலம் பெங்களூரூரா, இம்மாஸ், அல்போன்ஸா, செந்தூரா, நடுச்சாலை, குண்டு, நீளம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

ஜனவரி மாதத்தில் நிலவிய வறண்ட வானிலை மற்றும் கடந்த மாதங்களாக நிலவும் கடுமையான வெயில் காரணமாக, மா பிஞ்சுகள் காய்ந்து உதிர்ந்துவிட்டனர். இதனால் மா விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சுத் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து அடித்த செலவுக்கு கூட மாம்பழம் விளைச்சல் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மாம்பழத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தும், போதிய மாம்பழம் வரத்து இல்லாததால் வியாபாரம் முடங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.