ட்ரெண்டிங்

ஓட்டுப்போடுவதற்காக ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் இளைஞர்! 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்ற ஜப்பானில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவுச் செய்து, தாயகம் வந்துள்ளார் சேலம் இளைஞர். 

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். பொறியியல் பட்டதாரியான இவர், ஜப்பானில் பணியாற்றி வருகிறார். 21 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வந்த அவருக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்க முன் வந்த போதும், அதனை அவர் ஏற்கவில்லை. 

தேசத்தின் மீது பற்றுக் கொண்ட அவர், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக ஜனநாயகக் கடமையாற்ற சொந்த ஊர் வந்துள்ளார். இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானாலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் அங்கம் வகிப்பது தனக்கு மனநிறைவை அளிக்கிறது என அவர் கூறினார். 

இது குறித்து சங்கர் கூறுகையில், நகர்ப்புற மக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; கிராமப்புற மக்கள் தவறாது ஜனநாயகக் கடமையாற்றுகிறார்கள்; பணம், நேரம் செலவழித்தாலும் வாக்களிப்பதில் பெருமை எனத் தெரிவித்துள்ளார்.