ட்ரெண்டிங்

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 31- ஆம் தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், ஏப்ரல் 01- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.