ட்ரெண்டிங்

கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, சேலத்தில் அமைதி பேரணி!

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 07) காலை 08.00 மணிக்கு அமைதி பேரணி நடைபெற்றது. 

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலையிலிருந்து தொடங்கிய அமைதி பேரணி, அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு அவரது சிலைக்கு அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர். 

அமைதி பேரணியில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ச் அணிந்தும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.