ட்ரெண்டிங்

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு! 

சேலம் தனியார் திருமண மண்டபத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதைத் தொடர்ந்து, சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் கே.என்.நேரு சால்வை அணிவித்து அறிமுகப்படுத்தி வைத்தார். 

அதைத் தொடர்ந்து, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.