ட்ரெண்டிங்

சாம்பல், நிலக்கரி துகள்களால் அவதி: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் நிலக்கரி துகள்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக சுமார் 25,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதற்காக அருகே உள்ள சின்னக்காவூர் கிராமத்தையொட்டிய பகுதியில் நிலக்கரி அரவை இயந்திரம் அமைக்கப்பட்டு நிலக்கரி அரைக்கப்பட்ட வருகிறது.

இதனால் அதில் இருந்து வெளியேறும் நிலக்கரி துகள்கள் கிராம பகுதி முழுவதும் பரவி நுரையீரல் பாதிப்பு, தோல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அனல்மின் நிலையத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் உலர் சாம்பல் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாம்பல் புகை பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாம்பல் மற்றும் நிலக்கரி துகள்களால், நிலம், நீர் மாசடைந்து வருவதாகவும் அதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.