ட்ரெண்டிங்

ரயிலில் 6.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் காவல்துறை!

கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்டப் போதைப்பொருட்கள் ரயிலில் கடத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ரயில்களில் அவ்வப்போது சோதனைகளையும் நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில், பாட்னாவில் இருந்து சேலம் வந்த பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்துப் பார்த்தபோது, கஞ்சா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர், அந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுமார் 6.5 கிலோ கஞ்சாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.