ட்ரெண்டிங்

அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்கு பிறகு மேலும் ஒரு அடி சரிவு! 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒன்பது நாட்களுக்கு பிறகு மேலும் ஒரு அடி சரிந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 13- ஆம் தேதி மேட்டூர் அணையில் 65.97 அடியாக நீர்மட்டம் குறைந்த நிலையில், இன்று (பிப்.21) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.13 அடியில் இருந்து 65.01 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 28.56 டி.எம்.சி.யாக உள்ளது. 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 54 அடியாக வந்துக் கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் அணை மின்நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், கோடைக்காலத்தில் குடிநீருக்கு பாற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.