ட்ரெண்டிங்

சபாநாயகருக்கு பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கடிதம்!

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான வசதிகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையின் சபாநாயருக்கு பா.ம.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருள் கடிதம் எழுதியுள்ளார். 

பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் கீழ்க்கண்ட விவகாரங்கள் குறித்து சட்டமன்ற விதி எண் 55- ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையின் சபாநாயகருக்கு பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடிதம் எழுதியுள்ளார். 

,அதில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதை தடுத்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பள்ளப்பட்டி ஏரியை ஒட்டியுள்ள வலது புறத்தில் இருந்து கோடிப்பள்ளம் வரை தார்சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் அவசியம் குறித்தும் விவாதிக்க அனுமதிக் கோரியுள்ளார்.