ட்ரெண்டிங்

சுமார் 5 மணி நேரம் கும்மியாட்டம் ஆடிய பெண்கள், குழந்தைகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் நோக்கில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பயிற்சியாளர்கள் என பலரும் ஒருசேர ஆடினர்.

 

பாடல்களுக்கேற்ப கையசைவு, காலசைவு செய்து ஆடிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 

கும்மியாட்டத்தைக் காண ஓமலூர், காடையாம்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்ததுடன், புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.