ட்ரெண்டிங்

சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு!


நடப்பு 2023- 2024- நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றைச் செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதிக் கருதி மாநகராட்சியின் 3, 18, 29, 31, 43, 44, 46, 47, 48, 49 வார்டு பகுதிகளில் நாளை (பிப்.04) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறவுள்ள சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 3- ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நரசோதிப்பட்டி, குரங்குசாவடி, கோட்டம் எண் 18- ல் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், காசக்காரனூர் மெயின் ரோடு பகுதியிலும் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 29 மற்றும் 31- ல் உள்ள வெங்கடப்ப ரோடு, அம்மா உணவக வளாகத்திலும், அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 43-ல் புது தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கோட்டம் எண் 44-ல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கடம்பூர் முனியப்பன் கோயில் தெரு ஆகியவற்றிலும் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 46 மற்றும் 47-ல் வரதம்மாள் மருத்துவமனை வளாகம், கோட்டம் எண் 48 மற்றும் 49-ல் அகர மஹாலிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளது.

மேலும் நாளை (பிப்.04) அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் இவ்வசதியினைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.