ட்ரெண்டிங்

சேலம்- சிதம்பரம் பேருந்தில் டிக்கெட் மறுவிற்பனை செய்யப்பட்ட விவகாரம்!


சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசுப் பேருந்தில் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு குளிர்சாதனப் பேருந்து, நகரப் பேருந்தைப் போல பல நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி உள்ளது. இதனால் விரக்தியடைந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த பேருந்து வடலூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயணிகளிடம் வழங்கிய டிக்கெட்டுகள் போலியாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, நடத்துநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நடத்துநர் நேருவை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட மேலாளர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.