ட்ரெண்டிங்

சேலத்தில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை அறிமுகம்!

 

மின் கம்பியில்லாத ஏர் ஃபைபர் அதிவேக இணையதள சேவையை ஜியோ நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக, சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஏர் ஃபைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

படிப்படியாக, இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் ஜியோ ஏர் ஃபைபர் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஏர் ஃபைபர் சேவையை ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

சேலத்தில் உள்ள ஜஸ்ட் நவ் சேலம் நிறுவன அலுவலகத்தில் இன்று (அக்.16) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்தின் ஜியோ நிறுவனத்தின் மேலாளர் முகமது ரியாஸ், சேவை மேலாளர் சுவாமிநாதன்,மற்றும் ஃபைபர் மேலாளர் சுரேஷ் ஆகியோர் ஏர் ஃபைபர் சேவையைத் தொடங்கி வைத்தனர்.  

 

பின்னர், ஏர் ஃபைபர் கிட்டை  ஜஸ்ட் நவ் சேலம் நிறுவனத்தின் பணியாளர்களிடம் ஜியோ நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.