ட்ரெண்டிங்

லயன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடந்த பெட்டிஷன் மேளா!

சேலம் மாவட்டம், லயன்மேடு காவலர் சமுதாயக் கூடத்தில் இன்று (அக்.04) காலை 10.00 மணிக்கு சேலம் தெற்கு மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

 

இதில், சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை நேரில் வரவழைத்து. விசாரணை மேற்கொண்டு எதிர் தரப்பினரையும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தி உடனடித் தீர்வுக் காணப்பட்டது.

 

அதேபோல், மேலே குறிப்பிட்டுள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புகார் மனுக்களை வழங்கினர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீர்வுக் காண காவல் துணை ஆணையர் மதிவாணன், காவல் நிலையங்களின் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.