ட்ரெண்டிங்

திருமணிமுத்தாற்றைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்!

திருமணிமுத்தாற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

சேர்வராயன் மலை அடிவாரத்தில் உருவாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் முக்கியமான அடையாளம் ஆகும். இந்த நதி தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியது வேதனையளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து திருமணிமுத்தாற்றைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 

காந்தி ஜெயந்தியையொட்டி, முதற்கட்டப் பணிகளைத் தொடங்கி இருக்கும் குழுவினர், திருமணிமுத்தாற்றைத் தூய்மைப்படுத்துவதே நமது நோக்கம் என்று உறுதிமொழி எடுத்தனர். இதேபோல், எல்லாம் ஜீவராசிகளுக்கும் முக்கிய தேவையாக உள்ள நீர்நிலைகளை முறையாகப் பராமரிப்பது நம் அனைவரின் கடமையாகும்.